பொதுவாக இணையத்தளங்கள் அவற்றில் பதிவு செய்வதற்கென உங்களின் மின்னஞ்சல் முகவரியை தருமாறு கோருகின்றன. இவ்வாறான தளங்கள் அனைத்திற்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி தரவேண்டிய அவசியமில்லை. 10minutemail.com அல்லது Mailinator.com போன்ற தற்காலிக மின்னஞ்சல் சேவைகளிலிருந்து மின்னஞ்சல் முகவரி ஒன்றை உருவாக்கி அதனை கொடுத்து வந்தால் உங்களின் தனிப்பட்ட முகவரியில் ஸ்பாம் மெயில்கள் குவிவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். செய்தியில் தொழில்நுட்பம் பகுதியில் இன்று அறிமுகமாகும் இணையத்தளமும் தற்காலிக மின்னஞ்சல் சேவை தரும் இணையததளம், எனினும் இது ஏனைய தளங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றது என்பதைப் பார்க்கலாம்.
http://maildrop.cc/ இத்தளத்தில் ஞாபகத்தில் இருக்கக்கூடிய ஒரு மின்ஞசல் முகவரியை உடனடியாக உருவாக்கிக்கொண்டால். அந்த முகவரியை எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துகொள்ளலாம். 10minutemail.com or Mailinator.com போன்ற ஏனைய தளங்களைப்போல் ஒவ்வொரு தடவையும் மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ளத்தேவையில்லை.
இணையத்தள முகவரி
http://maildrop.cc/
No comments:
Post a Comment