இன்று எமது வலைப்பூவின் மூலம் பார்க்கவிருக்கும் பதிவானது கணினியின் Drivers தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் சிறப்பான மென்பொருளைப் பற்றியதுதான். Drivers மென்பொருள் என்பது கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்(Operating System)துடன் ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த Hard ware பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers என்று CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் install செய்து கொள்ளலாம்.அந்த Device Driver CD க்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுதல் அவசியமாகும்.
நமது கணினியில் Operating Systemஐ Reinstall செய்யும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைந்து போய் இருக்கும். Inter netல் Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணனியின் driversகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?
இதற்காக நான் அறிமுகம் செய்யும் மென்பொருள் தான் driver easy என்னும் மென்பொருளாகும்.இம் மென்பொருள் மூலம் எவ்வாறு மிக இலவாக கணினி Driversஐ Download செய்து install செய்து கொள்ளலாம்.இதற்கு முதலில் இம்மென்பொருளை தரவிரக்கம் செய்து கொள்ளவேண்டும்.தரவிரக்கம் செய்வதற்கு Download Buttonல் click செய்யுங்கள்.
அதன் பிறகு Download செய்த மென்பொருளை install செய்து கொள்ளவேண்டும். Install செய்த பிறகு அந்த மென்பொருளை open செய்யவும்.அதன் பிறகு படத்தில் காண்பிப்பதை Fallow செய்யுங்கள்
குறிப்பு:-இந்த மென்பொருள் Auto Detect Driver Software மட்டுமல்லாது இவை சார்ந்த ஏனைய தொழிற்பாடுகளை கொண்டுள்ளது.உதாரணமாக Driver Backup, Driver Restore, Hardware Information, offline Scan, Windows Updates போன்ற தொழிற்பாடுகளை கொண்டுள்ளது.இது தொடர்பான பதிவுகள் எமது வலைப்பூவில் தொடர்ச்சியாக இடம்பெறும்.
நன்றி. ஜஸாகுகல்லாஹு ஹைரன்...............
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page பிடித்திருந்தால் like செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு:- 077 9915835,075 4141331-Mohamed Najathi 075 2680648,077 8668853-Ahamed Nusky
No comments:
Post a Comment