4/24/13

உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்!


சமீபகாலங்களில் இணையதளங்கள் வழியாக நமது சுய விவரங்கள் திருடப்படுவதும், பின்னர் அதனால் பின்விளைவுகளை சந்திப்பதுமாக நாட்கள் நகர்கின்றன.தெரியாத அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து ‘சலுகை’ குறுந்தகவல்களை பெறுகிறீர்கள் அல்லவா? அதுகூட இப்படி நடத்தப்பட்ட ஒருவகையான திருட்டுதான்.

சிலநேரங்களில் உங்களுக்கு அலைபேசி சேவையைத்தரும் நிறுவனங்கள் இந்தவேலையை செய்கின்றன. சில நேரங்களில் நாம் பெரிதும் நம்பிப் பயன்படுத்தும் பெரிய பெரிய நிறுவனங்களே நமது விவரங்களை மொத்தமாக விற்கின்றன என்பதெல்லாம் பரவலாக நடக்கின்ற வாதம். 
உங்கள் தொடர்பான விவரங்கள் இணையம் வாயிலாக திருடப்படுவதை எப்படி தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
சாதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள். அதை உங்களுடன் இருப்பவர்களிலேயே யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதை முடக்குவது அவ்வளவு சுலபமில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே பாதுகாப்பு அவசியம்.
உங்கள் ஐடி கார்டு மூலமாகவே உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடியுமாம். ஐ.டி கார்டு மூலமாக தகவல்களை திருடுவதை RFID தெப்ட் என்கிறார்கள் வல்லுனர்கள்.
மால்வேர் என்பதுபோன்ற சிலவகையான வைரஸ்கள் நீங்கள் இணையதளம் பயன்படுத்துகையில் உங்கள் கணனியில் நிறுவப்படலாம். அவ்வாறு செய்தால் ஒவ்வொருமுறை நீங்கள்
இணையதளத்தை இணைக்கையில் உங்கள் மேலான தகவல்கள் மற்றும் கடவுச்சொற்கள் களவுபோகக்கூடும். எனவே நல்ல வைரஸ் தடுப்பான் பயன்படுத்துங்கள்.
சமுக வலைதளங்களின் மூலமாக திருட்டு நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற 50க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்கள் தாக்கப்பட்டு தகவல்கள் திருடப்பட்டது.
இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஒப்புக்கொண்டுள்ளன. எனவே சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான சுய விவரங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை சேமிக்காதீர்கள்.
ஈமெயில் வாயிலாக பல்வேறு விளம்பரங்களை அனுப்பியோ அல்லது வேறுமாதிரியான படங்களை அனுப்பியோ உங்கள் மிக்கியமான தகவல்கள் திருடப்படலாம்.
இங்கே கூறப்பட்டுள்ளதை தாண்டியும் பல வகையான திருட்டுக்கள் நடைபெறுகின்றன. எனவே இணையதளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் போது கவனமும், விழிப்புணர்வும் தேவை.

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *