4/13/13

வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள்.
இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது.
அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முதலில்,
1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2. Start --> Run --> cmd --> Enter கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.
4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *