4/23/13

பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை

இது போல பிரச்சினை நமக்கும் கூட சில நேரம் வந்திருக்கும் இது பெரும்பாண்மையான நபர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் இருந்தாலும் என்னைப்போல தெரியாத நண்பர்களும் இருக்ககூடுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இது போன்ற பிரச்சினையை ஐந்து வழிகளில் தீர்வு காணலாம்.



முதல் வழிமுறை 

Start ->Run டைப் cmd இப்போது ஒரு கருத்த விண்டோ திறக்கிறதா இதுதான் கமாண்ட் பிராம்ப்ட் சரி இனி நீங்கள் செய்ய வேண்டியது format/x G: என டைப் செய்யுங்கள் இதில் G எனகிற எழுத்து உங்கள் பென் டிரைவ்க்கான எழுத்தாகும் உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுங்கள் அடுத்து ஒரு எண்டர் கொடுங்கள், நான் தயராயிருக்கிறேன் என்பதாக ஒரு செய்தி வரும் அப்போதும் ஒரு எண்டர் கொடுங்கள், அடுத்ததாக பங்கீடு நடக்கும் இப்போதும் உங்களுக்கு ஒரு செய்தி வரும் தயங்காமல் ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்.



இரண்டாவது வழிமுறை 

Start ->Run டைப் cmd இப்போது திறக்கும் விண்டோவில் format/fs:NTFS G: என டைப் செய்து எண்டர் கொடுங்கள் (இதில் NTFS என்கிற இடத்தில் உங்கள் பென் டிரைவ் எந்த வகை என பார்த்துக்கொள்ளுங்கள் சாதரணமாக FAT32 என்பதாக இருக்கும் அதை தெரிந்துகொள்ள பென் டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறந்து பாருங்கள்) மேலும் G என்பது பென் டிரைவின் எழுத்தை குறிக்கும் உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுத்து விடுங்கள் மீதமுள்ள விபரம் மேலே சொன்ன முதல் வழிமுறையை ஒத்ததுதான் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் புரியும்.



மூன்றாவது வழிமுறை 

Start ->Run டைப் compmgmt.msc என கொடுத்து ஓக்கே கொடுங்கள் இப்போது கம்ப்யூட்டர் மேனேஜ்மென்ட் என்கிற விண்டொ திறக்கும் அதில் Disk Management என்பதில் கிளிக்கி உங்கள் பென் டிரைவை பார்மட் செய்து விடுங்கள் ஒரு வேளை இப்போதும் பிரச்சினை இருந்தால் Change Drive Letter என்பதை தெரிவு செய்து எழுத்தை மாற்றி பின்னர் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் இப்போதும் சரியாகவில்லையென்றால் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்து உடனேயே வேறு எதுவும் செய்யாமல் உங்கள் பென் டிரைவை பார்மட் செய்ய முயற்சி செய்யுங்கள்.



நான்காவது வழிமுறை 

இதற்கு நீங்கள் அன்லாக்கர் மென்பொருளை தரவிறக்கவும் உங்க்ள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது உங்கள் பென் டிரைவில் வலது கிளிக் மெனுவை பாருங்கள் அதில் புதிதாக அன்லாக்கர் இருக்கிறதா அதை வைத்து அதில் உள்ள டேட்டாவை அழித்து விடுங்கள் பின்னர் எளிதாக பார்மட் செய்துவிடலாம் இந்த அன்லாக்கர் வழியாக அழிக்க முடியாத எந்த பைலையும் அழித்து விடலாம்.



ஐந்தாவது வழிமுறை 

எனது பழைய பதிவில் பார்ட்டிசியன் மேனேஜர் தரவிறக்க முகவரி கொடுத்துள்ளேன் அதை பயன்படுத்துவது பற்றியும் அந்த பதிவுலேயே எழுதியிருக்கிறேன் சிரமம் பார்க்காமல் தரவிறக்கி உங்கள் பென் டிரைவ் பார்மட் செய்து விடவும் செயல் படுத்துவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது.

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *