4/21/13

Facebook உருவான கதை

இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்
படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).
தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.
அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.
முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.
அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.
இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.
தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.
மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.
உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.
இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகை
ப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *