5/25/13

பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்

பேஸ்புக் உபயோகிக்கும் அனைவருக்கும் வருகின்ற பிரச்சனை என்னவென்றால் நம் நண்பர்கள் ஏதேனும் Applicatication அல்லது Game-ஐ பயன்படுத்தும்பொழுது நமக்கும் அதனை பயன்படுத்த கூறி அனுப்பும் Invite ஆகும்.





இது போன்ற அழைப்புகளை தடுக்கும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
உங்களுக்கு வரும் Invite கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று இருக்கும்.
நீங்கள் தற்பொழுது இரண்டு விடயங்களை Block செய்யவும். ஒன்று Invitation அனுப்பும் நபரை அனுப்ப இயலாதவாறு செய்வதன் மூலம் அவரால் உங்களுக்கு Game, Application Request போன்றவற்றை அனுப்ப இயலாது. ஆனால் அவர் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் இருப்பர், மற்றும் உங்கள் status களையும் அவரால் பார்க்க முடியும்.
இரண்டாவதாக குறித்த Game அல்லது Applicationஐ Block செய்தால் உங்கள் நண்பர்கள் அனுப்பும் Game அல்லது Application invite உங்களுக்கு வராது.
நீங்கள் பரிந்துரைக்க நினைத்தால் முதலாவதையும், வேண்டும் என்றால் இரண்டாவதையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளவேண்டும்.
இப்போது Facebook >> Privacy Settings பகுதிக்கு வரவும் (காண்க கீழே படம்)
வருகின்ற பக்கத்தின் இடது புற Side Bar பகுதியில் Blocking என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது Manage Blocking என்ற இந்த பக்கத்தில் "Block app invites" என்ற பகுதியில் Invite அனுப்பும் நண்பரின் பெயரை கொடுக்க வேண்டும். இதனால் அவரிடம் இருந்து உங்களுக்கு Invite எதுவும் வராது.
அடுத்து "Block Apps" என்ற பகுதியில் குறிப்பிட்ட Application அல்லது Game பெயரை கொடுத்து அவற்றையும் Block செய்வதன் மூலம் இனி Game, Application போன்ற எந்த இடையூறுகளும் இல்லாமல் பேஸ்புக்கில் உங்களது வேலைகளை கவனிக்கலாம்.
பின் குறிப்பு: இதே பக்கத்தில் நீங்கள் Event Invite அனுப்பும் நபர்களை கூட Block செய்யமுடியும். இதனை நீங்கள் "Block event invites" என்ற பகுதியில் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

About

Hi, I'm Najathi.
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.

Every Week I Publish a short post on writing, publishing, or content of IT Related

Contact Form

Name

Email *

Message *