Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று
தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.
நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.
இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.
அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.
அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.
Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.
Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.
அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்
Download
5/8/13
New
Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்
About Najathi
I've started entrepreneurial company, Twin Brothers.Inc.
One is self-funded & the other is venture backed. I also send a weekly. where I share relevent, curated links.
Every Week I Publish a short post on writing, publishing, or content of IT related.
Software and Crack
Labels:
Device Driver Tips,
Software and Crack
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment